பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம் அக்- 30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று 30.10.2021 பசும்பொன் தேவர் திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வதுகுருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ராமநாதபுரம் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ராஜ கண்ணப்பன் அவர்கள், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு