ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

 ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

ஆர்ப்பாட்டத்தில்,கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 25 லட்சம் ரூபாயை வழங்கிட வேண்டும்

வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலை அறிவித்து காலி பணியிடங்களை நிறப்ப வேண்டும்

தேர்தல் பணிகளில் ஈடுபட்டோருக்கான நிதியினை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை நிறைவேற்ற தவறினால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை புறக்கணிப்பதென முடிவு செய்திருப்பதாக கூறினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் அலுவலர் சுப்பிரமணி துணை வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்