ஜால்ரா அடிக்காதீங்க....! குறைகளை சுட்டிக்காட்டுங்கள்....!! பத்திரிக்கையாளர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்.....!!!

ஜால்ரா அடிக்காதீங்க....!  குறைகளை சுட்டிக்காட்டுங்கள்....!! பத்திரிக்கையாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்.....!!!

சென்னை கிண்டியில் இன்று காலை நடைபெற்ற ''Trillion Dollar Tamil Nadu'' கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Times of India நாளிதழின் 'Merchants of Madras' என்ற வணிக பிரதியை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2008- ஆம் ஆண்டு 'Times of India' நாளிதழின் சென்னை பாதிப்பை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சென்னை பதிப்பு தொடங்கப்பட்டது.. அதை தொடங்கி வைத்தவர் கலைஞர் கருணாநிதி.. அப்போது பேசிய கலைஞர், என்னை கவர்ந்த பெயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்று குறிப்பிட்டார்.. டைம்ஸ் ஆஃப் இந்தியா வாழ்க.. வளர்க.. என்று வாழ்த்துகிறேன்.. என்று பாராட்டி இருந்தார்.

183 ஆண்டுகளாக இந்த நாளிதழ் வெளிவருகிறது.. இது சாதாரண விஷயமல்ல.. அச்சு தொழில் என்பது எளிதான தொழில் கிடையாது.. இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா தான் உலகளவில் அதிக பேர் படிக்கக்கூடிய ஆங்கில நாளிதழ் என்ற பெருமை கொண்டது.. புதிய அரசு அமைந்த பிறகு எத்தனையோ செயல்களை செய்துகொண்டிருக்கிறது.. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை.. அதை நோக்கி தான் எல்லா திட்டங்களும் உள்ளது.. அந்த அடிப்படையில் தான் இந்த ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.. திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதக்காலத்தில் தொழில் துறை புத்துணர்வு அடைந்துள்ளது..

புதிய தொழிகளை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டும் எனில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.. அனைத்து தொழில்களும் தொடங்க சாதகமான சூழல் உள்ளது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரைகளாக வெளியிட வேண்டும்..

அரசை பாராட்டி எழுத வேண்டும் என்று கட்டளையிடவில்லை.. விமர்சனம் வையுங்கள்.. அதை ஏற்றுக்கொள்ள திறந்த மனதோடு தயாராக இருக்கிறோம்.. என்னுடைய வருத்தமெல்லாம்.. சிறு தவறு நடக்கும் போது, அதை பெரிதாக, விமர்சனம் செய்யும் சில பத்திரிகைகள், பெரிய நன்மைகளை செய்யும் போது சிறு அளவில் பாராட்டவில்லையே என்பது தான்.. பாரட்ட வேண்டியதற்கு பாரட்டுபவர்களுக்கு தான் திட்டுவதற்கான உரிமையும் உள்ளது என்பதை அனைத்து ஊடகங்களும் மறந்துவிட வேண்டாம்.." என்று தெரிவித்தார்..