புதிய பென்சன் திட்டத்தை திரும்ப பெற வேண்டி ஆர்ப்பாட்டம்

புதிய பென்சன் திட்டத்தை திரும்ப  பெற வேண்டி ஆர்ப்பாட்டம்


செப் - 30 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாவட்ட மைய முடிவுகளின் படி ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில்  இன்று 30.9.2021மாலை 5.45 மணி அளவில் புதிய பென்சன் திட்டத்தை திரும்ப  பெற வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை  ஒழுங்குபடுத்தி உத்தரவிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்காண பதவி உயர்வுகளில் சட்டத்தின்படி நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டும்,

என்பன உள்ளிட்ட 15 அம்ச   கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிக்குமார்

தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமீம் ராஜா,  மற்றும் மாவட்ட இணை செயலாளர் காசிநாததுரை,

துணை தலைவர் வரதராஜன், வட்ட கிளை தலைவர் உதயகுமார், வட்ட கிளை துணை செயலாளர்  கோகுல்நாத்  ஆகியோர், முன்னிலை வகித்தனர்.  இதில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன, இதில் தமிழ்நாடு வருவாய் சங்கத்தினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு