அப்துல் கலாம் 90 வது பிறந்தநாள் விழா
ராமநாதபுரம் அக்-15
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் 90 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள் ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஷெய்க் மன்சூர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அன்னாரது குடும்பத்தினருக்கு அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், மகள் நசீமா, மரைக்காயர் பேரன் ஷேக் சலீம், ஷேக் தாவூது மருமகன் ராமேஸ்வரம் RI நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு