ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி விற்பனை


அக்-16

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி 2021 சிறப்பு தள்ளுபடி விற்பனையை  ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திரு.ஆ.ம. காமாட்சி கணேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். 

இன்று காலை  ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை ராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) திரு.ஆ.ம. காமாட்சி கணேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி  துவக்கி வைத்தார். இந்த விழாவில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் திரு. வீ.ஜீ அய்யான் மற்றும் திருமதி கே.கே. சங்கீதா அவர்கள், முன்னிலை வகித்தார்கள், மதுரை மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் 17 விற்பனை நிலையங்களின் மூலம் 2021, 2022 ஆம் ஆண்டிற்கு விற்பனை குறியீடாக  ரூ.2000 லட்சங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை 43.64 லட்சங்கள் இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளன. கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விழாவில் மண்டல மேலாளர் மோகன் குமார், மேலாளர் (தணிக்கை)  மேலாளர் ஞானப்பிரகாசம், விற்பனையாளர் கே. பாண்டியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு