பான் மசாலா கறைகள்.. சுத்தம் செய்ய மட்டும் ஆண்டுக்கு ரூ 1200 கோடி.. செலவழிக்கும் இந்திய ரயில்வே
பான் பராக் மற்றும் புகையிலை போன்றவற்றால் ரயில் நிலையங்களில் ஏற்படும் எச்சில் கறையைச் சுத்தம் செய்ய மட்டும் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயை ரயில்வே நிர்வாகம் செலவு செய்கிறது.இந்தியாவில் பொது இடங்கள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் தவிர்க்க முடியாதது பான் பராக் மற்றும் புகையிலை போன்றவற்றின் கறைகள். குறிப்பாக, தினமும் பல லட்சம் பேர் பயன்படுத்தும் ரயில்களிலும் ரயில்வே நிலையங்களிலும் இந்த கறைகள் பெரும் சிக்கலாகவே உருவெடுத்துள்ளது
பல கோடி செலவழித்து புதிதாகக் கட்டப்படும் ரயில் நிலையங்கள் கூட வெறும் சில மாதங்களில் பான் பராக் கறை அதிகம் இருக்கும் இடமாக மாறிவிடுவது வருந்தக் கூடிய விஷயம். இந்த கொரோனா காலகட்டத்தில் இப்படித் துப்புவதால் கொரோனா பரவல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.ரூ 1200 கோடிமேலும், இது போன்ற பான் மசாலா கறைகளைச் சுத்தம் செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் பெரும் தொகையைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், ரயில்களிலும் ரயில்வே நிலையங்களிலும் ஏற்படும் பான் மசாலாவை சுத்தம் செய்ய இந்திய ரயில்வே-க்கு ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வரை செலவாவதாகத் தகவல் வெளியாகியுள்ளது
. மேலும் இதனால் ஏற்படும் கறைகளை நீக்கப் பல கோடி லிட்டர் நீரும் வீணாவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.புதிய முயற்சிரயில் பயணிகளின் அலட்சியப் போக்கால் அழகாகக் கட்டமைக்கப்படும் ரயில் நிலையங்களும் கூட, சில மாதங்களில் மோசமான நிலைக்குச் சென்றுவிடுகின்றன. ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் துப்புவதைத் தடுக்க இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக இதற்காக 42 ரயில் நிலையங்களில் கையடக்க பைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எளிதில் மக்கக்கூடிய இந்த பைகள் 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளன. பல்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த பைகளை 15 முதல் 20 முறை வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.என்ற நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. முதற்கட்டமாக மேற்கு, வடக்கு மற்றும் மத்திய ரயில்வே இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த பைகளைப் பயணிகள் தங்கள் பாக்கெட்டில் வைத்து, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தேவைப்படும் நேரத்தில் இந்த கையடக்க பைகளில் பான் பசாலா மற்றும் புகையிலையைத் துப்பிக்கொள்ளலாம். இதன் மூலம் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பை அதிநவீனஎன்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இது எச்சிலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வெளியே விடாது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில். "இது மிக முக்கியமான ஒரு ஒப்பந்தம். இது பயணிகள் ரயில்வே என அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும் ஒரு ஒப்பந்தம். ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை இது குறைக்கும்" என்றார். இவை 3 அளவுகளில் வெளிவரவுள்ளது. சிறிய ரக பைகளை 10 முறையும் பெரிய பைகளை 30 முறையும் பயன்படுத்தலாம்.-