காங்கிரஸ் கட்சியின் சார்பில் பசும்பொன்னில் தேவர் திருமகனார் 116 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வது குருபூஜை விழா

காங்கிரஸ் கட்சியின் சார்பில் பசும்பொன்னில் தேவர் திருமகனார் 116 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வது குருபூஜை விழா

 ராமநாதபுரம் அக்-30

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் 116 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா  தலைமையில், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, திருச்சி எம்பி திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் கரு மாணிக்கம், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, அறந்தாங்கி MLA.எஸ்டி ராமச்சந்திரன், Ex.MLA மலேசியா பாண்டியன், மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், Ex.மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேது பாண்டி ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸார்  கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட மாநில இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு