முத்துராமலிங்கத்தேவர் 104 வது ஜெயந்தி விழா மற்றும் 59வது குருபூஜை விழா

முத்துராமலிங்கத்தேவர் 104 வது ஜெயந்தி விழா மற்றும் 59வது குருபூஜை விழா


ராமநாதபுரம் அக்- 14 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் 104 வது ஜெயந்தி விழா மற்றும் 59வது குருபூஜை விழா வருகிற 28,29,30 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த நிலையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் (பொ) ஆ.ம. காமாட்சி கணேசன் அவர்கள், ஆய்வு செய்தார். தேவர் நினைவிடத்திற்கு வந்த காமாட்சி கணேசனை நினைவாலய பொறுப்பாளர் காந்தி, மீனாள், நடராஜன், நிர்வாகிகள், தங்கவேல்,ரவி தங்கவேல்,போஸ், ஆகியோர் வரவேற்றனர். அங்கு தேவர் நினைவாலய புகைப்பட கண்காட்சி, தேவர் வாழ்ந்த வீடு, தியான மண்டபம், பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர். வளர்ச்சி கே.ஜே.பிரவீன்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவன்தாஸ், கழுதி யூனியன் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், ஆகியோர் ஆய்வு செய்தனர். 


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு