சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு யாழினி, M.E. வேட்புமனு தாக்கல்

சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு  யாழினி,  M.E. வேட்புமனு தாக்கல் 


ராமநாதபுரம் செப்-20

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் பதவிக்கு திருமதி யாழினி,  M.E. அவர்கள், இன்று (20.09.2021) வேட்புமனு தாக்கல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் சக்கரக்கோட்டை ஜமாஅத் தலைவர் துங்கு அப்துல் ரகுமான், சக்கரக்கோட்டை மனோகரன், அல் அமீன் மரக்கடை உரிமையாளர் முகமது அலி, மற்றும் சக்கரக்கோட்டையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர். மாநில தேர்தல் அலுவலரின் உத்தரவிற்கிணங்க 5 பேருக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யும்பொழுது, அனுமதிக்கவில்லை மனு தாக்கல் முடிந்தபின் வேட்பாளர் யாழினிக்கு சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர், N.A. ஜெரினா பானு