கோவில் மனைகளில் வாழ்ந்து வருவோரின் வசிப்பிட உரிமையை பாதுகாக்க வேண்டும்; சி.பி.ஐ. மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்....!

கோவில் மனைகளில் வாழ்ந்து வருவோரின் வசிப்பிட உரிமையை பாதுகாக்க வேண்டும்; சி.பி.ஐ. மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்....!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரயில்வே ஸ்டேஷன்ரோட்டிலுள்ள அஹாரா மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்,தமிழ்மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் செப்டம்பர் 18-ம் தொடங்கி 21-ம் தேதிவரை 4 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டசெயலாளரும்,தளி எம்எல்ஏவுமான டி.ராமச்சந்திரன்,தேசிய நிர்வாக குழுஉறுப்பினா் மகேந்திரன்,மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன் ஆகியோர்தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் முத்தரசன்,துணை செயலாளா்கள் சுப்பராயன் எம்.பி.,வீரபாண்டியன்,எம்எல்ஏ மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநிலத் தலைவா் குணசேகரன், துணைத் தலைவா் லகுமைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநில நிா்வாக குழு கூட்டத்தில்,வரும் செப்டம்பர் 27-ம் தேதி நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி
அறிவித்துள்ளது.

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
முழுமையாக ஆதரிப்பது,பங்கேற்பது என்றும்,தமிழக சட்டபேரவையில் குடியுரிமை
சட்டத்திருத்த எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு
தெரிவிப்பது,மத்திய அரசு விவசாயிகள் விரோத சட்டங்களை
திரும்ப பெறவேண்டும்.விவசாயிகளின் கோவில் நில குத்தகை பாக்கி முழுவதையும்
தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

கோவில் மனைகளில் வாழ்ந்து வருவோரின் வசிப்பிட உரிமையை பாதுகாக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு புதிய சட்ட முன்வடிவை செப்டம்பர் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம்
நிறை வேற்றியதை வரவேற்கிறோம்.மேகேதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து
நிறுத்த வேண்டும்.காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் விதிமுறைகளை
மாற்றி திருத்தியமைக்கவும்,காலம் காலமாக வாழ்ந்துவரும் மக்களின்
வாழ்விட,தொழில் நடத்தும் உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை
எடுக்கவேண்டும்.

ஓசூர் மாநகராட்சி விரிவாக்கம் என்ற அடிப்படையில் 8 கிராம ஊராட்சிகளை இணைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.இந்த 8 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் மற்றும் ஆடு,மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.எனவே ஏற்கெனவே இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முன்னுரிமை
கொடுத்து 8 கிராம ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட
வேண்டும்.

வனப்பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியினர்,மலைவாழ் மக்களின்
நில உரிமையை பாதுகாக்க வேண்டும்.ஓசூர்,தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி
தாலுகா பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை
சேதப்படுத்துவதுடன்,மனிதர்களையும் தாக்கி கொன்று வருகிறது.எனவே வனவிலங்கு
தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இக்கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தளி சட்டமன்ற உறுப்பினர் T.ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.