திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை, ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்ட, நரிக்குறவர்கள்!
திருநெல்வேலி,செப்.6:- வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாளான, இன்று (செப்டம்பர்.6) காலையில், திருநெல்வேலி மேற்கு மாவட்டம், "அழகிய பாண்டிய புரம்" என்னும் ஊரில், திருநெல்வேலி- சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், "கூடாரங்கள்" அமைத்து, முகாமிட்டிருக்கும், "நரிக்குறவர்" சமுதாயத்தை சார்ந்த, எண்பது குடும்பத்தினர், ஒட்டு மொத்தமாக புறப்பட்டு வந்து, திருநெல்வேலி "கொக்கிரகுளம்" பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் "கோரிக்கை மனு" ஒன்றை அளித்தனர்." தற்பொழுது நாங்கள் கூடாரம் அடித்து, முகாமிட்டிருக்கும், அழகிய பாண்டிய புரம் கிராமத்தில் உள்ள, புறம்போக்கு நிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, தமிழக அரசு சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில், எங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தருமாறு, கேட்டுக் கொள்கின்றோம்!" - இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில், குறிப்பிடப்பட்டுள்ளது. காடை,கவுதாரி, பாசிமணி, ஊசிமணி மற்றும் மலைத்தேன் போன்றவற்றை ஊர்ஊராக கொண்டுபோய் செய்து வரும் தங்களுக்கு, வீடுகளை கட்டிக்கொள்ளும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால், தங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர வேண்டும்" என்று, அந்த மனுவில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.