காஸ் மானியம் வரவில்லையா: மை எல்.பி.ஜியில் புகார் அளிக்கலாம்*

 காஸ் மானியம் வரவில்லையா: மை எல்.பி.ஜியில் புகார் அளிக்கலாம்

வீட்டு உபயோக காஸ் விலையில் குறிப்பிட்ட தொகையை மானியமாக நுகர்வோர் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்துகிறது. அவ்வப்போதுமானிய தொகை வரவில்லை என நுகர்வோர் பலர் தெரிவிக்கும் நிலையில் மானியம் வங்கியில் செலுத்தியதை அறியவும், புகார் அளிக்கவும் myLPG.in இணையதளம் உதவுகிறது.

ஆண்டு வருமானம் அடிப்படையில் வழங்கப்படும் மானிய காஸின்முழு விலையை நுகர்வோர் கொடுத்து வாங்க வேண்டும். பின் மானிய தொகையை வங்கி கணக்கில் மத்திய அரசுசெலுத்தும். நேரடியாக கணக்கில் செலுத்துவதால் கள்ளச் சந்தையில் மானிய காஸ் விற்பது குறைந்தது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே வழங்குவதால் நுகர்வோர் சிக்கனமாகபயன்படுத்தி வருகிறார்கள்.

ஜூன் 2019ல் வீட்டு காஸ் ரூ.753 ஆக இருந்த போது ரூ. 267.75 மானியம் வழங்கப்பட்டது. அதற்கு பின் காஸ் விலை அதிகரித்தும் ரூ.150க்கு மேல் மானியம் வழங்கவில்லை. மார்ச் 2020 காஸ் விலை ரூ.826 இருந்த போது ரூ.263.38, செப்., - டிச., 1, 2020 ரூ. 610 இருந்த போது ரூ.24.95 மானியம் வழங்கிய அரசு, 2021 ஆக., 28 நிலவரப்படி ரூ.900.50 ஆக (மதுரை) காஸ் விலை உயர்ந்தும் ரூ.46.48 தான் மானியமாக வழங்குகிறது.

இந்த மானியமும் முறையாக வங்கியில் செலுத்தப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.மானிய தொகை வரவில்லை என்றால் myLPG.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். இணையதளம் முன் பக்கத்தில் இன்டேன், பாரத்,எச்.பி., லோகோக்கள் இருக்கும். அதில் சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யவும்.

அடுத்து'கிவ் யுவர் பீட்பேக் ஆன்லைன்', எல்.பி.ஜி., 'சப்சிடி ரிலேட்டட்', 'சப்சிடி நாட் ரிசீவ்டு' கிளிக் செய்யவும். நிறுவனத்தில் பதிவு செய்த அலைபேசி அல்லது கஸ்டமர் எண் கொடுத்தால் காஸ் வாங்கிய பின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட மானிய தொகை காட்டும். அத்தொகை கணக்கில் வரவில்லை என்றால் கீழே 'கம்ப்ளைன்ட்' பிரிவில் புகார் பதிவு செய்து தீர்வு காணலாம்.