தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்


 ராமநாதபுரம் செப்- 30

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மாவட்ட மைய முடிவுகளின் படி ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு புதிய பென்சன் திட்டத்தை திரும்ப  பெற வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டகாலத்தை ஒழுங்குபடுத்தி உத்தரவிட வேண்டும், களப்பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவையான அளவில் ஜீப் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட 15 அம்ச   கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நகர் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னிலை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் மணிகண்டன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். இதில் மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள்  ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு