ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

 ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்  கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் செப்-27 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக இன்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் வெங்கலக் குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்பி. செந்தில்குமார் தலைமையில், நடைபெற்றது. இதில் ஊராட்சிக்கு வழங்கப்படும் SFC நிதியை உடனடியாக வழங்க வேண்டும் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். தனி அலுவலர் காலத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு பதிலாக போடப்பட்ட ஜோனல் டெப்டி BDO பொறுப்பை அரசு திரும்பப் பெறவும் ஊராட்சி தலைவர்களை அவமரியாதை செய்யும், காசு கொடுத்தால் கையழுத்து எனக் கூறும் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் மேகலா அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய, மாநில அரசுகளை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேலச்செல்வனூர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன் மற்றும் பனைக்குளம் பவுசியா பானு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். சித்ரா மருது, செயலாளர் எஸ். செந்தில்குமார் பொருளாளர்| முஹம்மது இக்பால், ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு