திருநெல்வேலியில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக, பயிற்சி வகுப்புகள்!

திருநெல்வேலியில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக, பயிற்சி வகுப்புகள்!

  திருநெல்வேலியில், ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, பயிற்சி வகுப்புகள்!  மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கினார்! திருநெல்வேலி,செப்.4:- "திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 9 ஊராட்சி ஒன்றியங்களில், வாக்காளர்கள் நேரடியாக தேர்வு செய்திடும் வகையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என, மொத்தம் 2 ஆயிரத்து 069  பதவியிடங்களும்,  மறைமுகமாக தேர்வு செய்திடும் வகையில்,மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர்,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்,   ஒன்றியக்குழு துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர்கள் என, மொத்தம் 224 பதவியிடங்களும் உள்ளன!" என்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்காக, இன்று ( செப்டம்பர்.4) திருநெல்வேலியில் நடைபெற்ற, பயிற்சி வகுப்புகளை, துவக்கி வைத்து பேசிய போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய, மாவட்ட ஆட்சிதலைவர்," இம்மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில், மொத்தம் 1 ஆயிரத்து,731 வார்டுகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் சேர்த்து, 3 லட்சத்து, 30 ஆயிரத்து,487 ஆண்கள், 3 லட்சத்து, 43 ஆயிரத்து, 324 பெண்கள், 56 இதர பிரிவினர் என, மொத்தம் 6 லட்சத்து, 73 ஆயிரத்து, 867 வாக்காளர்கள் உள்ளனர்!" என்றும் தெரிவித்தார்." தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், மாநில தேர்தல் ஆணையம் வகுத்து தந்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடந்திடல் வேண்டும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  செய்யும் போதும், வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரிசீலனை செய்திடும் போதும், வேட்புமனுக்களை நிராகரித்திடும் போதும், வேட்பு மனுக்களை, வேட்பாளர்கள் திரும்பப் பெறும் போதும், வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்திடும் போதும், வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்திடும் போதும், வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடும் போதும், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு நாளின் போது, கொரோனா விதிமுறைகளின்படி, வாக்காளர்கள் தங்களுடைய கைகளை, " சானிடைசர்" கொண்டு சுத்தப்படுத்தி கொள்ளுதல், முகக்கவசங்கள் அணிதல் மற்றும் சமூகஸ்ரீஇடைவெளியை பின்பற்றுதல் போன்றைவை, பின்பற்றப்படுவதை, உறுதி செய்திடல் வேண்டும்!" என்று, இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, வலியுறுத்தினார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 20 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 277 பேர் என, மொத்தம் 297 பேர், இந்த பயிற்சி வகுப்பு, பயிற்சி பெற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்  அ.பழனி ஆகியோர் உட்பட, பல உயர் அலுவலர்கள், பங்கேற்று இருந்தனர்.