தொடர்ந்து விவசாயிகளை அலை கழித்து வரும் வேளாண்மைத் துறையினர்..

 தொடர்ந்து விவசாயிகளை அலை கழித்து வரும் வேளாண்மைத் துறையினர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றிய வேளாண்மை துறை அலுவலகத்தில் அரசால் மானியத்துடன் வழங்கப்படும் உளுந்து இன்று வழங்குவதாக கூறி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு விவசாயிகளுக்கு இல்லை எனக்கூறி விவசாயிகளை அழைத்து காலை முதல் மதியம் வரை நிற்கவைத்து அலைகழித்து வருகின்றனர்... மானிய விலையில் உளுந்து வாங்குவதற்காக திரளாக வந்திருந்த விவசாயிகள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஏமாற்றமடைந்து வருத்தத்தோடு வீட்டிற்கு சென்றனர். இது சம்பந்தமாக வேளாண்மைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்