அகவிலைப்படி உயர்வை, உடனடியாக வழங்கக்கோரி திருநெல்வேலியில், ஓய்வூதியர் சங்கங்களின், கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
திருநெல்வேலி,செப்.9:-
* 2020-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 1-ஆம் தேதி முதல், வழங்கப்பட வேண்டிய, மூன்று தவணைகள், 11 சதவிகித அகவிலைப்படியை, உடனடியாக, வழங்கிட வேண்டும். * மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவச்செலவு முழுவதையும், வழங்கிட வேண்டும். *ஓய்வு பெற்ற, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள, அகவிலைப்படியை உடனடியாக, வழங்கிட வேண்டும்! *மருத்துவ காப்பீடு திட்டத்தை, அமுல்படுத்திட வேண்டும்!"- ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி, வண்ணார்பேட்டை, "செல்லப்பாண்டியன்" சிலை அருகில், "தமிழ்நாடு அரசு அனைத்து, ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்" கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்" நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சொக்கலிங்க கருப்பையா, கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மின்வாரிய ஓய்வூதிய நலச்சங்க, மாநில துணைத்தலைவர் ராஜாமணி ஆர்ப்பாட்டத்தை, துவக்கி வைத்துப் பேசினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க, மாநிலச் செயலாளர் ஆதிமூலம், அரசு போக்குவரத்து ஊழியர் நலச் சங்க துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், கோரிக்கைகள் குறித்து பேசினர்.அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் ஆறுமுகம் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டப் பொருளாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதி ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கப் பிரதி ஆறுமுகம், அரசு போக்குவரத்து நல சங்கப் பிரதிநிதி பழனி மின்வாரிய ஓய்வூதியர் சங்கப்பிரதிநிதி சீனி உட்பட, இருநூற்றுக்கும் மேற்பட்டோர், கலந்து கொண்டார்கள்.