ராமநாதபுரத்தில் எல்ஐசியின் நிறுவன நாள் விழா

ராமநாதபுரத்தில் எல்ஐசியின் நிறுவன நாள் விழா

ராமநாதபுரம் செப்-01 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் எல்ஐசியின் நிறுவன நாள் விழா செப்டம்பர் 1-ஆம் தேதி எல்ஐசியின் நிறுவன நாள் விழா 1956-ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு  65 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி சீரிய முறையில் எல்ஐசி பயணித்து வருகிறது. எல்ஐசியின் பங்குகளை இவ்வாண்டு விற்கப் போவதாக மத்திய அரசு அறிவித்து அதற்கான சட்ட திருத்தங்களையும் செய்துள்ளது. அரசு நிறுவனம் என்ற வகையில் திறம்பட செயல்படும் எல்ஐசியின் பங்குகளை விற்க கூடாது என்பதை, நிறுவன  நாள் கோரிக்கையாக, அரசுக்கும் கோரிக்கைக்கு, ஆதரவு தருமாறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டது.      

66-வது எல்ஐசி நிறுவனம் நாளை முன்னிட்டு ராமநாதபுரம் எல்ஐசி கிளையில் இந்திய சீன எல்லையில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் திரு. பழனி அவர்களின், துணைவியார் வானதி அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி இன்சூரன்ஸ் வார விழாவை துவக்கி வைத்தார். இவ் விழாவிற்கு வந்தவர்களை, ராமேஸ்வரம் எஸ்.ஓ. கிளை மேலாளர் திரு. சுப்பிரமணியம் வரவேற்றார். ராமநாதபுரம் முதலிலே கிளை மேலாளர் திரு. லட்சுமணன் சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுரம் கிளை உதவி மேலாளர் திரு. சிவகுமார் நன்றியுரை கூறினார். இவ்விழாவில் ஏராளமானவர்கள் பாலிசிதாரர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விற்பனைப் பிரிவு தலைவர் திரு. முத்துப்பாண்டி செய்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு