ஓசூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 71வது பிறந்த நாள் விழா

 ஓசூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 71வது பிறந்த நாள் விழா


 தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவின் கல்வியாளர் பிரிவு சார்பாக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாள் விழா ஓசூரில் நடைபெற்றது.

இந்த விழா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் பி வாசுதேவன் முன்னிலை வகித்தார் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் திரு கே ஆர் நந்தகுமார் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் வி எம் அன்பரசன் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டிஜி ராஜா ஊடகத்துறை மஞ்சு உள்ளிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

ஓசூர் செய்தியாளர் E.V.  பழனியப்பன்