தமிழக சிறைகளில், 22 ஆண்டுகளாக, தண்டனை அனுபவித்து வரும், இஸ்லாமிய கைதிகள் 37 பேர்களையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

தமிழக சிறைகளில், 22 ஆண்டுகளாக, தண்டனை அனுபவித்து வரும், இஸ்லாமிய கைதிகள் 37 பேர்களையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

ஹரியானா மாநில அரசு வழக்கு ஒன்றில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக சிறைகளில், 22 ஆண்டுகளாக, தண்டனை அனுபவித்து வரும், இஸ்லாமிய கைதிகள் 37 பேர்களையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!  திருநெல்வேலியில், மனிதநேய மக்கள் கட்சியின், மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக அரசுக்கு, வேண்டுகோள்! திருநெல்வேலி,செப்.5:- அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான, " மின்னல்" அறக்கட்டளையின், நிறுவனர் தலைவர் மில்லத் இஸ்மாயில் இல்லத் திருமணநிகழ்வில் பங்கேற்பதற்காக, இன்று (செப்டம்பர்.5) திருநெல்வேலிக்கு வருகை தந்த, "மனிதநேய மக்கள் கட்சி"யின், மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வண்ணார்பேட்டை, "அரசினர்" விருந்தினர் இல்லத்தில், செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-  "செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், 150- ஆவது ஆண்டு பிறந்த தினமான இந்நாளில்,14  சிறப்பு அறிவிப்புகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ளார். அவற்றை, மனிதநேய மக்கள் கட்சி மனமுவந்து வரவேற்கிறது. வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை,எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக, அதனை ஆவணப்படத்தவும், காட்சிப்படுத்தவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வ.உ.சி."சுதேசி" கப்பல் நிறுவனத்தை துவக்கிய போது, அந்த நிறுவனத்தை, துவக்குவதற்கு, பெருமளவில் நிதியுதவி செய்தவர் "பக்கீர் முகம்மது ராவுத்தர்"  ஆவார். அவரை தவிர, இன்னும் 8 முஸ்லிம்கள், வ.உ.சி.கப்பல் நிறுவனத்துக்கு, தங்களுடைய பங்காக, சுமார் 2 லட்சம் ரூபாய் வரை, நிதியுதவி செய்துள்ளனர். எனவே, வ.உ.சி.யின் வரலாற்று ஆவணங்களில், இத்தகைய தகவல்களையும், "தமிழக அரசு"கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக சிறைச்சாலைகளில் இருந்துவரும், முஸ்லிம் கைதிகள் உட்பட, ஆயுள் தண்டனை கைதிகள் அனைவரையும், விடுதலை செய்யவேண்டும். இஸ்லாமிய கைதிகள் மொத்தம் 37  பேர், 22 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக சிறைகளில், வாடி வருகின்றனர். ஹரியானா மாநில அரசு வழக்கு ஒன்றில், ஆயுள் தண்டனை காலமான,    14 ஆண்டுகளுக்கு, தண்டனை விதிக்கப்பட்டிருக்கும், ஆயுள் தண்டனை கைதிகளை, தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, அந்தந்த மாநில அரசுகளே, விடுதலை செய்யலாம்! என்று, தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில், முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிகளை, உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். தமிழ் நாட்டில், மொத்தம் உள்ள, 16 சுங்கச்சாவடிகளில், மற்ற மாநில சுங்கச்சாவடிகளை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை, தமிழக அரசு உடனடியாக, கட்டுப்படுத்திட வேண்டும்!" - இவ்வாறு, மனிதநேய மக்கள் கட்சியின், மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான  "பேராசிரியர்" எம்.எச்.ஜவாஹிருல்லா, திருநெல்வேலியில், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது, கட்சியின்,  மாநில  பொதுச்செயலாளர் ஹாஜா மைதீன், துணை தலைவர் ஹமீது ஆகியோர், உடனிருந்தனர்.

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்