அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

 அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை

2019 - 20 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 36 பேரும் (1.49 சதவீதம்),  2020- 21 ம் ஆண்டில் 20 பேரும் (0.83 சதவீதம்)  அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதையடுத்து, அதை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசுக்கு  அளித்த பரிந்துரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

2019 - 20 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 36 பேரும் (1.49 சதவீதம்),  2020- 21 ம் ஆண்டில் 20 பேரும் (0.83 சதவீதம்)  அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் , அரசு பொறியியல் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி , அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரி என ஒட்டுமொத்தமாக அனைத்தையும் சேர்த்து 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 377 பேர் (5.26 சதவீதம்), 2020 - 21 ஆம் கல்வி ஆண்டில் 338 பேர்( 5.17 சதவீதம்) சேர்ந்து உள்ளனர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை மிக மிக குறைவாக உள்ளதும் இந்த அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது