ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே டாக்டர் குடும்பத்தினரை தாக்கி 15 பவுன் நகை வழிப்பறி.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே டாக்டர் குடும்பத்தினரை தாக்கி 15 பவுன் நகை வழிப்பறி.

செப்-28

 ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிபவர் எலும்பு முறிவு  நிபுணர் மருத்துவர்  இவர் குடும்பத்தினருடன் கீழக்கரை அருகே உள்ள செங்கல்  நீரோடையில் உள்ள இவரது தோப்பிற்கு சென்றுவிட்டு காஞ்சிரங்குடி மேல வலசை வழியாக காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென நாய் ஒன்று குறுக்கே காரின் முன்பு வந்து விழுந்தது, இதை அடுத்து டாக்டர்  காரை நிறுத்தினார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்து நகையை கேட்டு மிரட்டினர் அவர் தர மறுத்ததால் மேலும் சிலரை வரவழைத்து டாக்டர் குடும்பத்தினரை கம்பியால் தாக்கி தங்கச்சங்கிலி உள்ளிட்ட 15 பவுன் நகைகளை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து டாக்டர் கீழக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு