அ.தி.மு.க. சார்பில், வ.உ.சிதம்பரனார், 150- ஆவது பிறந்த தினவிழா!

அ.தி.மு.க. சார்பில்,   வ.உ.சிதம்பரனார்,       150- ஆவது பிறந்த தினவிழா!

திருநெல்வேலியில், அ.தி.மு.க. சார்பில், இந்திய சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார்,       150- ஆவது பிறந்த தினவிழா!                  தமிழக முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு!  திருநெல்வேலி,செப்.5:- இந்திய சுதந்திர போராட்ட வீரரும், ஆங்கிலேயருக்கு எதிராக, சுதேசி கப்பலை இயக்கி, "கப்பலோட்டிய தமிழன்" என்னும், அடைமொழி பெற்றவருமான, வ.உ.சிதம்பரனார் என்றழைக்கப்படும், வ.உ.சி.யின், 150- ஆவது பிறந்த தினவிழா, இன்று (செப்டம்பர்.5) தமிழகமெங்கும், தேசிய உணர்வுடன் கொண்டாடப்படுகிறது.இந்நாளையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாளையங்கோட்டை  "மனக்காவலம் பிள்ளை பூங்கா" வளாகத்தில்  அமைந்துள்ள, வ.உ.சி.யின், திருவுருவச்சிலைக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அதன் செயலாளர்  "தச்சை" கணேசராஜா முன்னிலையில், அ.தி.மு.க.வின், மாநில இலக்கிய அணி செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி,  "மலர்மாலைகள்" அணிவித்து,  "மரியாதை"  செய்தார். அப்போது பேசிய அவர், " வ.உ.சி.யின் தியாக உணர்வினையும், ஆங்கிலேயரை எதிர்த்த அபார துணிவினையும், நாம் என்றென்றும், நினைவில் கொள்ள வேண்டும்!" என்று, கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்,மாநில அமைப்புச் செயலாளர்கள் " சுதா" K.  பரமசிவன், A.K.சீனிவாசன், அவைத்தலைவர்  "பரணி" A.சங்கரலிங்கம் உட்பட, பலர் கலந்து கொண்டு, வ.உ.சி.க்கு,  "புகழ் அஞ்சலி" செலுத்தினர்.