அருப்புக்கோட்டையில் வீட்டு பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலக சர்வேயர் கைது

அருப்புக்கோட்டையில் வீட்டு பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலக சர்வேயர்  கைது  12 ஆயிரம்லஞ்சம் வாங்கிய  நகராட்சி சர்


வேயர் கைது!
வீட்டு பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ.12யிரம் லஞ்சம்   நகராட்சி சர்வேயர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டு பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலக சர்வேயர் சிவசங்கரன் 40, உதவியாளர் சூரியநாராயணன் 56 நேற்று கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்டை செம்பட்டி வடக்கு தெரு சின்னமுத்து 38. 

வெள்ளக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய நகராட்சி அலுவலக சர்வேயர் சிவசங்கரன் 40, உதவியாளர் சூரியநாராயணனிடம் 56,  ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். 

நேற்று மாலை 5:00 மணிக்கு நில அளவை பிரிவிற்கு சென்ற சின்னமுத்து ரூ.12 ஆயிரம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.