பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 113 வது பிறந்தநாள்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 113 வது பிறந்தநாள்


 ராமநாதபுரம் செப்-15 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினருமான திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், இன்று காலை  மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் ராமநாதபுரம் கிழக்கு நகர்  செயலாளர் கார்மேகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து மாண்புமிகு திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு, கானொலி காட்சி மூலம் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த நேரலை நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதனை மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா. முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் மாவட்ட ஒன்றிய, நகர திமுகவினர் நிர்வாகிகள் கண்டு கழித்தனர்.  வருகை தந்தவர்களுக்கு டிபன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் அமைச்சசர்கள் சுப. தங்கவேலன், வி.சத்தியமூர்த்தி, தலமை செயற்குழு உறுப்பினர் எஸ்.அகமது தம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர்  திவாகரன், போகழூர் ஒன்றிய செயலாளர் கதிரவன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் புல்லாணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய பாடகர் சீனி முகம்மது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு