விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்க கோரி, 100 கோவில்களில், இந்து முன்னணியினர், வழிபாடு நடத்தி, ஆர்ப்பாட்டம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்க கோரி, 100 கோவில்களில், இந்து முன்னணியினர், வழிபாடு நடத்தி, ஆர்ப்பாட்டம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்க கோரி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரேநாளில், மொத்தம் 100 கோவில்களில், இந்து முன்னணியினர், வழிபாடு நடத்தி, ஆர்ப்பாட்டம்! திருநெல்வேலி,செப்.2:- "கொரோனா" பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாட்டில், பொது இடங்களில், " விநாயகர்" சிலைகளை வைத்து, "பிரதிஷ்டை" செய்வதற்கு,  தமிழக அரசு " தடை" விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டுப்பாடுகளுடன் "விநாயகர் சதுர்த்தி" விழாவினை கொண்டாட, அனுமதி கிடைத்திடவும் வேண்டி, திருக்கோவில்களில் இறைவனிடம் முறையிடும் நிகழ்ச்சிகள், இன்று (செப்டம்பர்.2) ஒரேநாளில், திருநெல்வேலி மாவட்டத்தில், மொத்தம் 100 திருக்கோவில்களில், ஒரே நேரத்தில் நடைபெற்றன. அதனை தொடர்ந்து, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பிராஞ்சேரி அருள்மிகு கரையடி மாடசுவாமி மற்றும் அருள்மிகு வீரியப்பெருமாள் சாஸ்தா திருக்கோவில் ஆகியவற்றில் நடைபெற்ற, வழிபாடு ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின், திருநெல்வேலி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், தலைமை வகித்தார். , ஒன்றிய பொதுச்செயலாளர்  ராஜவேலு, ஆட்சிக்குழு உற்ப்பினர்கள் சிவபாலன், சுப்பிரமணியன், செல்வக்கனி, மாரியப்பன், ராமநாதன் மற்றும்  பொன்ராஜ் உட்பட, பலர் கலந்து கொண்டு,                   "கோஷம்" போட்டனர்.