காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதமானது ; பி.ஆர். பாண்டியன்
ஆகஸ்ட் -31
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதமானது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான திரு.பி.ஆர் பாண்டியன் அவர்கள், இன்று ராமநாதபுரம் முதுனாள் கிராமத்திற்கு வருகை தந்து முதுனாள் கிராமத்தில் விவசாயி மலை சந்திரன் இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். அப்போது நமது நிருபரிடம் அவர் கூறியதாவது
:- முன்னதாக முதுநாளில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை அடுத்து அவர் கூறியதாவது மதுரை துவங்கி ராமநாதபுரம் வரை வழியில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி,தூர்வாரி | ஆர்எஸ்மங்கலம் வரை ஒரு போகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் 2020 2021 களில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மிளகாய் பயிர்களுக்கும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரியில் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்தை முடக்க, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதற்கு மோடி அரசு துணை போகிறது. இதனை தடுத்து நிறுத்த இந்த சதியை அம்பலப்படுத்த தமிழகம் புதுச்சேரி மாநிலங்களோடு கேரளாவின் ஆதரவை தமிழக முதல்வர் கோரி பெற வேண்டும் கேரளா உடனான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே கேரள முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர்கள் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இது தொடர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதமானது என்று அவர் கூறினார். அவருடன் தென்மண்டல தலைவர் மதுரைவீரன், உயர்மட்ட குழு உறுப்பினர் ராசிபுரம் சுதா தர்மலிங்கம், திருவாரூர் மாவட்ட செயலாளர் குருசாமி, ஆகியோர் உடனிருந்தனர். மறைந்த விவசாயியின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு