கர்ப்பப்பை நோய்கள் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

கர்ப்பப்பை நோய்கள் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்


 ஆகஸ்ட்-12 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம்

ஊராட்சி மற்றும் குரு மருத்துவமனை இணைந்து குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் பெரியபட்டணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அதன் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி

தலைமையில் இலவச முகாம் நடைபெற்றது.  இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பைரோஸ்கான்,         சுமதி ஜெயக்குமார், எஸ்.டி.பி.ஐ.கட்சி நகரத் தலைவர் முகம்மது சலீம், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் அஸ்கர் அலி  ஆகியோர் சிறப்பு. அழைப்பாளராக கலந்து கொண்டனர்.  மகளிர் நல சிறப்பு மருத்துவர்  கல்பனா பல் மருத்துவர் ஜெமிலு நிஷா ஆகியோர் பயனாளிகளை ரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 

வார்டு உறுப்பினர்கள் பீர்முகைதீன்  நாகலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில் 150-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ்கான் ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் ஆகியோர் செய்திருந்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு