தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்


ராமநாதபுரம் ஆகஸ்ட் - 29 

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் சகோதரர் உமர் பாரூக் தலைமையில், இன்று காலை நடைபெற்றது. கீழ்க்கண்ட தீர்மானங்கள் இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன தமிழக அரசு தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரியும் தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் அரசு ஆன்லைன் வகுப்பு நடத்த ஆவன  செய்யுமாறும் மாட்டுக்கறி தின்னாதே என கூறியும் பாரத் மாதா கி ஜே போன்ற சில வார்த்தைகளைச் சொல்ல தூண்டியும் முஸ்லிம்களை கொலை செய்து வரும் காவிகளின் அநியாயம் அதிகரித்து வரும்  நாட்டில் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் அந்த காவி சிந்தனைக்கு தீனி போடும் வகையில் காவிகளின் கற்பனை தெய்வமான பாரதமாதாவிற்கு கோவில் அமைக்கவும், வழிபாடு செய்யவும், தற்போது திமுக அரசு மீது ஒதுக்கி இருப்பது ஜனநாயகத்தை விரும்பக்கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை மறு பரிசீலனைக்கு உட்படுத்தும் படி இந்த மாவட்ட  செயற்குழு கேட்டுக்கொள்கிறது. உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட  இதில் மாநில செயலாளர்கள், தாஜீதீன், ரபீக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் முஹம்மது பருஸ், மாவட்ட பொருளாளர்  முகமதுகான், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் பலபகுதிகளில்  இருந்து, வந்து கலந்துகொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு