போலிபத்திரிக்கையாளர் என்றால் என்ன?
*பத்திரிக்கையாளர்களுக்கு பிரஸ் கவுன்சில் தேவையான ஒன்று*
பத்திரிகை துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் -அதில் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள்-வேலை வெட்டி இல்லாதவர்கள் -திருட்டு செயலில் ஈடுபடுபவர்கள்- சாராயம் மதுபாட்டில் விற்பவர்கள் -ஊரில் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்- காவல்துறை ஏனைய அலுவலகங்களில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொண்டு அதனை விற்பது மோசடி வேலையில் ஈடுபடுபவர்கள்- சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் - கட்டப்பஞ்சாயத்து வேலையில் ஈடுபடுபவர்கள்- இன்னும் சொல்லப்போனால் பல்வேறு விதமான குற்ற சம்பவம் செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்கள் எல்லாரும் ஒரு குரூப்பாக சேர்ந்துகொண்டு ஏதோ ஒரு தலைப்பில் பத்திரிக்கை ஆரம்பித்துவிட்டோம் -யூடியூப் சேனல்- தொடங்கிவிட்டோம்- ஆன்லைன் பத்திரிக்கை தொடங்கிவிட்டேன்- ஆன்லைன் டிவி தொடங்கிவிட்டேன் என்று முதலில் வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்வது பல போலி நிருபர்களை நியமித்து எப்படி ஏமாற்றுவது என்று பயிற்சி கொடுப்பது - முதலில் அவர்கள் பல்லை இலித்துக் கொண்டு செல்லும் இடம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்- உள்ளூர் அமைச்சர்- எம்எல்ஏ இவர்களிடம் சென்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு பல பேரிடம் காட்டி ஏமாற்றுவது -அதிகாரிகளை மிரட்டி பணம் பெறுவது அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பெறுவது ஒரு கட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணிலேயே மண்ணைத் தூவி அனைவரையும் மிரட்டி ஒரு பொழப்பு நடத்தும் ஒரு சமூக விரோதிகள் இவர்கள்ள்ள்ள்....
இதைப் பற்றி சொல்லவேண்டுமானால் பல்வேறு விதமான சம்பவங்கள் தினந்தோறும் நடைபெற்று செய்தியாக வந்த வண்ணம் உள்ளன. இவர்களைக் கட்டுப்படுத்த அவராலும் யாராலும் முடியாது. தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தீர்ப்பை அனைத்து செய்தியாளர்களும் வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனென்றால் மூத்த செய்தியாளர்களும் காவல் துறையினரும் பத்திரிக்கை சங்கங்களும் அரசும் இவர்களை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை.
உயர்நீதி மன்ற உத்தரவினை அனைத்து உண்மையான பத்திரிகையாளர்களும் வரவேற்று ஆதரவு தரவேண்டும். அப்போதுதான் ஓரளவிற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கை துறை உருப்படும் ...பத்திரிக்கை துறையில் உள்ள உண்மையான பத்திரிகையாளர்களும் உருபடுவார்கள்..