ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருநெல்வேலி மாநகராட்சியின், அனைத்து வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ. போட்டி!மாநகர் மாவட்ட, செயற்குழு கூட்டத்தில், முடிவு!

 ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருநெல்வேலி மாநகராட்சியின், அனைத்து வார்டுகளிலும்,  எஸ்.டி.பி.ஐ. போட்டி!மாநகர் மாவட்ட, செயற்குழு கூட்டத்தில், முடிவு!

திருநெல்வேலி,ஆக.31:- 

எஸ்.டி.பி.ஐ.கட்சியின், திருநெல்வேலி

மாநகர் மாவட்ட, "செயற்குழு கூட்டம்", அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, "மேலப்பாளையம்" நகரில், நேற்று (ஆகஸ்ட்.30) இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.எஸ்.சாகுல்அமீது உஸ்மானி தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் ஹயாத் முஹம்மது, அனைவரையும் வரவேற்று, பேசினார்.

* திருநெல்வேலி உள்ளிட்ட, தமிழ்நாட்டில் விடுபட்ட, ஒன்பது மாவட்டங்களில் மட்டும், அடுத்த மாதம் (செப்டம்பர் மாதம்) நடைபெறவுள்ள, ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருநெல்வேலி மாநகராட்சியை பொறுத்தவரையில், 

மாநகராட்சியில் மொத்தம் உள்ள,               55 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ.சார்பில்,  வேட்பாளர்களை நிறுத்துவது என, இந்த கூட்டத்தில், ஒருமனதாக, " தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து.                            " * திருநெல்வேலி  மாநகர் பகுதிகளில், நீண்ட நாட்களாக, நடைபெற்று வரும், "ஸ்மார்ட் சிட்டி" திட்டப்பணிகளை,  காலதாமதமின்றி, விரைந்து முடிக்க 

வேண்டும்!                             ** மாநகராட்சி தோன்றிய காலம் முதல், இன்று வரையிலும், தொடர்ந்து பல ஆண்டுகளாக,

 புறக்கணிக்கப்பட்டு வரும்,  மேலப்பாளையம் வார்டுகளில், உள்கட்டமைப்பு

 வசதிகளை, உடனடியாக 

நிறைவேற்றித்தர வேண்டும்!" என,  மாநகராட்சி நிர்வாகத்தை, வலியுறுத்திடும் வகையிலான, மற்ற இரு தீர்மானங்களும், இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.ஏ.கனி,     மாவட்ட செயலாளர்கள் 

"பேட்டை" முஸ்தபா, "பர்கிட்" அலாவுதீன்,

மாவட்ட பொருளாளர்  "வழக்கறிஞர்" ஆரிப் பாட்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  சேக் அப்துல்லாஹ்,

"ஜவுளி"காதர், ரினோஷா ஆலிமா,

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான  தலைவர் மின்னத்துல்லாஹ், செயலாளர் "பாளை" சிந்தா, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி தலைவர் இலியாஸ், செயலாளர் முகம்மது கவுஸ் ஆகியோர், இந்த "செயற்குழு" கூட்டத்தில்,கலந்து கொண்டு, தங்களுடைய கருத்துக்களை, பதிவு செய்தனர். கூட்ட முடிவில், மாவட்ட செயலாளர் "பேட்டை" முஸ்தபா, நன்றி கூறினார்.