திருவண்ணாமலை தாட்கோ மூலமாக எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!!

 திருவண்ணாமலை தாட்கோ மூலமாக எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!!! 


திருவண்ணாமலை மாவட்டத்தினை சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ மூலமாக 1 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது மாணவர்கள் தங்கள் விருப்பப்படி பயிற்சிகளை தேர்வு செய்யலாம்  பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் www.training.tahdco.com என்ற இணையத்தளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு போக்குவரத்து படி வழங்கப்படும் மற்றும் பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டுதல் அளிக்கப்படும் பயிற்சி முடிந்து சான்றிதழ் பெற்றவர்கள் தொழில் தொடங்கினால் மானியத்துடன் வங்கிகளில் கடனுதவி பெற்றிட   வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.