ராமநாதபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
ராமநாதபுரம் ஆகஸ்ட்-29
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் தேர்வு செய்யப்பட்டார், ராமநாதபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரியபட்டணம் ஆடிட்டோரியத்தில் காலை நடைபெற்றது. இதில் 2021 ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஐ கட்சிக்கு மாவட்ட தலைவராக பெரியபட்டணம் ரியாஸ்கான் ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
. இவர் கட்சியின் பணியை தலைமேற்கொண்டு செய்பவர். இவர் கொரோனா காலத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, பொதுமக்களுக்காக ஓடோடி சென்று பணி செய்பவர். ஆகவே எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு இவரை மாவட்ட தலைவராக தேர்வு செய்துள்ளது. நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி. ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு