திசையன்விளை அருகே உள்ள, அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தல திருவிழா கொடியேற்றம்!

திசையன்விளை அருகே உள்ள, அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தல திருவிழா  கொடியேற்றம்! 

திசையன்விளை அருகே உள்ள, அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தல திருவிழா  கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு! 

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை, "புனித பிரகாசியம்மாள்" திருத்தலத் திருவிழா, நேற்று (ஆகஸ்ட்.30) அதிகாலையில், கொடியேற்றத்துடன், தொடங்கியது. அதனை தொடர்ந்து,  காலை 7 மணிக்கு, பொத்தக்காலன் விளை "திருக் கல்யாணமாதா திருத்தலம்"அதிபர் வெனி இளங்குமரன் தலைமையில், "திருப்பலி"  நடைபெற்றது. மாலையில்,தமிழ்நாடு அரசின், வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி,கொடி ஏற்றப்பட்டது. தூத்துக்குடி மறைமாவட்ட, "முதன்மை குரு" பேரருட்தந்தை பன்னீர்செல்வம் கொடியை அர்ச்சித்து, அதனை புனித கம்பத்தில்,ஏற்றி வைத்தார்.அதன்பின்பு,  "அருட் தந்தையர்கள்" நெல்சன் பால்ராஜ், ரெமிஜியூஸ், ஜெகதீஷ், இருதயசாமி, எஸ்.கே.மணி, ராபின் மற்றும்  விஜயன் ஆகியோர் தலைமையில், "நற்கருணை ஆசீர்"  நடைபெற்றது.

 திருவிழா நாட்களில், தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை , மறையுரை , நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள்,   நடைபெறுகின்றன. அதே போல், அந்நாட்களில், காலை 6 மணிக்கு "திருப்பலி" நிகழ்ச்சியும், நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக, அடுத்த மாதம், 6-ஆம் தேதி,  8- ஆம் நாள் திருவிழாவை   முன்னிட்டு,                காலையில் "புதுநன்மை" திருப்பலியும்,  7-ஆம் தேதி, 9 -ஆம் திருவிழா நாளில்,  மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், "சிறப்பு நற்கருணை ஆசீர்"நடைபெறுகிறது. 10 -ஆம் திருவிழா அன்று, பக்தர்கள் எவருமின்றி, "அலங்கார சப்பரம்" முன்பாக, "திருப்பலி"  நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை,     திருத்தல "பங்குதந்தை" அருட்பெருந்திரு செல்வரத்தினம், "உதவி பங்குத்தந்தை" சவரிராஜ், அருட்சகோதரிகள், ஊர் நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கொடியேற்றுநிகழ்ச்சியில், அருட்தந்தையர்கள் பலரும், கலந்து கொண்டனர்.