சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு   சிறப்பு பூஜை

 ராமநாதபுரம் ஆகஸ்ட்-18 

ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட கழக செயலாளர் ஜி. முனியசாமி அவர்கள், தலைமையில் தியாகத் தலைவி சின்னம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் அருள்மிகு வழிவிடும் முருகன் கோவில்  சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் செல்வம், அம்மா பேரவை நகர செயலாளர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், விவசாய அணி மாவட்ட செயலாளர் கணேசன், மற்றும் மகளிர் அணி முத்துலட்சுமி ஐடி விங் ராணி,  மண்டபம் ஒன்றிய செயலாளர் ராஜேஸ்வரி, சாந்தி, வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் சேது, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலா மற்றும்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு