75வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்

75வது இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்


ராமநாதபுரம் ஆகஸ்ட்-14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் மண்டபம் கிளை மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து 14.08.2021 அன்று காலை 10 மணியளவில் மண்டபம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பேரிடர்கால 25-வது மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு கிளைத்தலைவர் A.முஹம்மது பயாஸ் தலைமை தாங்கினார்.

மண்டபம் காவல்துறை துணைஆய்வாளர்  M.கோட்டைச்சாமி அவர்கள் இம்முகாமை துவங்கிவைத்து சிற்றுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் A.முகம்மது அயூப்கான் மாவட்ட செயலாளர் ஆரிப்கான் ,மாவட்ட துணை தலைவர் முஹம்மது பசீர் முன்னிலை வகித்தனர் மற்றும் கிளை செயலாளர் அஜ்மல்கான் பொருளாலர் பைசல் கிளை நிர்வாகிகள் மற்றும் 

100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில் 30 தன்னார்வ இரத்த கொடையாளர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட மருத்துவஅணி செயலாளர் கீழக்கரை நசுருதீன் அவர்களுடன் சேர்ந்து மண்டபம் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு