ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?

ஈபிஎஸ், ஓபிஎஸ்.. சட்டசபை குழு தலைவர் பஞ்சாயத்தில் வெல்வது யார்?

தமிழக சட்டசபையில் கட்சியின் குழு தலைவரை (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் 2-வது முறையாக சென்னையில் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்திலாவது அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் யாருக்கு சட்டசபை கட்சி குழு தலைவர் பதவி கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்தது; முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்; இதனால் ஆயிரம் அதிருப்திகள் இருந்தாலும் அத்தனையையும் பூட்டிவைத்துக் கொண்டு அமைதி காத்தது ஓபிஎஸ் தரப்பு.

அவ்வபோது பூடகமான செயல்பாடுகள் மூலம் தங்களது எதிர்ப்பை ஓபிஎஸ் தரப்பு காட்டிக் கொண்டிருந்தது. அதிகாரத்தை கையில் வைத்திருந்ததால் இதையெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடந்து போய்க் கொண்டிருந்தார் ஈபிஎஸ்.

விட்டுத்தருவதாக இல்லை

முட்டி மோதும் ஈபிஎஸ், ஓபிஸ்

ஆனால் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுகவில் யாரும் பொறுத்துப் போவதாகவும் இல்லை. யாரும் எந்த ஒரு பதவியையும் எந்த ஒரு காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை. சட்டசபை குழு தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே பகிரங்கமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் முட்டி மோதினர்.

இதனால்தான் 4 மணிநேரம் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒரு முடிவும் எடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மீண்டும் நாளை நடைபெறுகிறது. என்னதான் சீனியர் தலைவர்கள் இருதரப்பிலும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் விட்டுக் கொடுத்து நிற்பதாக தெரியவில்லை.

இந்த களேபரங்களுக்கு மத்தியில் சசிகலா தலைமைதான் வேண்டும் என்கிற குரலும் அதிமுகவில் வெடிக்க தொடங்கி உள்ளது. 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையிலாவது அதிமுகவின் உட்கட்சி அதிகராப் போர் முடிவுக்கு வருமா? நாளைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவார்களா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்