உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ புதிய துறை உருவாக்கம்
முதல்-அமைச்சர் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை, தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார்.
இந்த புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.