அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள்
தி.மு.க. ஆட்சியை பிடித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும், தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இவர் நியமிக்கப்பட்டார்.
இறையன்பு ஐஏஎஸ் ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். தற்போது தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசு தனது புத்தகங்களை வாங்க வாய்ப்புள்ளது எனக் கருதுகிறார்.
இந்த நிலையில் அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறும் தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.