மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவியேற்ற வி.செந்தில்பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவியேற்ற வி.செந்தில்பாலாஜி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசில் பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.


வி.செந்தில்பாலாஜி


மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.செந்தில்பாலாஜிக்கு வயது 46. இவரது சொந்த ஊர் கரூர் ராமேஸ்வரப்பட்டி. 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்த அவர் 2006-ம் ஆண்டு கரூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கரூரில் போட்டியிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்த அவர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.
Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்