கடைசி நேரத்தில் துரைமுருகனுக்கு உதவிய கே சி. வீரமணி: 20 கோடிக்கு விலை போன அதிமுக வேட்பாளர்...?!
இந்த முறை தேர்தலில் பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர்.. இவர்கள் எல்லாருமே சீனியர்கள்.. தங்கள் தொகுதியில் இதுவரை செய்து வைத்த நலத்திட்டங்களும், உதவிகளும், அரசியல் செல்வாக்குகளும் எப்படியாவது இவர்களுக்கு ஓட்டுக்களை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுபோக, இவர்கள் தொகுதிகளில் சிலபல தாராளங்களை காட்டியதாகவும் தகவல்கள் வந்தன.. அதுமட்டுமல்ல, சொந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யாமல், கூட்டணி கட்சிக்கும் பிரச்சாரத்தில் சொந்த தொகுதிகளிலேயே முடங்கி கிடந்தனர்.
அப்படி இருந்தும் வீரமணி தோற்று போய்விட்டார்.. திமுகவின் துரைமுருகனும் சரி, வீரமணியும் சரி.. இருவருமே நல்ல நெருக்கத்தில் உள்ளவர்கள்.. இருவருமே மாவட்டங்களின் விஐபிகள்... அசைக்க முடியாத செல்வாக்கை பெற்றிருப்பவர்கள்.. அதனால்தான், இந்த தேர்தலில் துரைமுருகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அவரை எதிர்த்து ராமுவை வேட்பாளராக நிறுத்தினாராம் வீரமணி.
அதேபோல ஜோலார்பேட்டை தொகுதியில், வீரமணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே, தேவராஜ் என்ற வேட்பாளரை கொண்டு போய் நிறுத்தினாராம் துரைமுருகன்.. இருவருமே பலவீனமான வேட்பாளர்கள்.. கடைசியில் இவர்கள் போட்ட கணக்கு, இவர்களுக்கே ரிப்பீட் ஆகி விட்டது.. தட்டுத்தடுமாறி கடைசி நேரத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்..
ஆனால் வீரமணி நிலைமையோ பரிதாபம்.. நோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்று விட்டாராம் இந்த அமைச்சர். இதுதான் அதிமுகவையே ஆடிப்போக வைத்துள்ளது. அதாவது நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தது என்றால், நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்று போயுள்ளார்.. இதற்கெல்லாம் என்ன காரணம்? தொகுதி மக்களுக்கு ஏற்கனவே இவர்மீது அதிருப்தி இருந்தது..
இதுபோக பல்வேறு புகார்கள் எடப்பாடியாருக்கும் சென்றுகொண்டுதான் இருந்தது. அப்போதே செம அப்செட்டில் இருந்த எடப்பாடியார் இப்போது அமைச்சர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம். வடமாவட்டங்களை, முக்கிய அமைச்சர்களை நம்பிதான் எடப்பாடியார் என்னென்னவோ முயற்சிகளை துணிச்சலாக மேற்கொண்டார்.. ஆனாலும் ஜோலார்பேட்டை சொதப்பலாகிவிட்டது.
அதுமட்டுமல்ல, இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இந்த தொகுதியில் நடந்துள்ளது.. இங்கு பெயர் குழப்பத்தை ஏற்படுத்தவே வீரமணி பெயரில் மூன்று வீரமணிகள் போட்டியிட்டார்களாம்.. அதில், ஏ. வீரமணி 148, எச். வீரமணி 209, எஸ்.வீரமணி, 217 ஓட்டுகள் என மொத்தம், 574 ஓட்டுகள் பெற்றனர்.
கடந்த, 2016 தேர்தலில், வீரமணி 82,525 ஓட்டுக்கள் பெற்று, 10,991 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து காட்டினார்.. ஆனால் இந்த முறை 5,874 ஓட்டுகள் அதிகமாக பெற்றும், 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் வீரமணியேதான்..!
இப்போது வேலூர் மாவட்டத்தில் இன்னொரு விஷயமும் உலா வந்து கொண்டுள்ளது. தமிழகமே திமுகவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த வேளையில் காட்பாடியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தார் கடைசி வரையில் அவரது வெற்றி உறுதி செய்யப்படவில்லை இதற்கு காரணம் அதிமுக வேட்பாளர் கொடுத்த கடுமையான போட்டி. இந்த போட்டி அப்படியே தொடர்ந்திருந்தால் கடைசியில் கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் போன்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஆவது ராமு வெற்றி பெற்றிருப்பார்.
அதற்குள் துரைமுருகனுக்கும் வீரமணி கும் மேற்பட்ட இடையே மேற்கொள்ளப்பட்ட வியாபாரம் துரைமுருகன் வெற்றியடைய செய்துள்ளது.
முதலில் 50 கோடியில் துவங்கிய பேரம் 10 கோடி வந்தால் விட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேட்பாளருக்கு 20 கோடியில் முடிந்தது ஆச்சரியம்தான்.
அதனால்தான் காட்பாடி தொகுதியை அவர் விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு இரண்டு வகையில் லாபம். ஒன்று பேரம் பேசி முடித்ததும் இப்போதைய கமிஷன் ரூபாய் 2 கோடி மற்றும் துரைமுருகன் அமைச்சராக இருக்கும் வரை கமிஷனும் கலெக்சனும் கனெக்சனும் தொடரும் என்கின்றனர் வேலூர் மாவட்ட உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தங்களும்.