DTCP கட்டிட அனுமதி பெற கால அவகாசம்.....
சிங்கநிகர் சங்கத் தலைவர்களுக்கு...
என் இனிய காலை வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகிறேன்.
2011 க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு டிடிசிபி கட்டிட அனுமதி பெறுவதற்கு ஒரு சதுர அடிக்கு சலுகை கட்டணமாக உள்ளது உள்ளபடி ரூபாய் 7.50 பைசா மட்டும் கட்டி விதிவிலக்கு டன் கூடிய கட்டிட அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளோம்.
சென்னையில் டிடிசிபி உயர் அதிகாரிகளை சந்தித்து பேசி உள்ளோம். நீதிமன்ற உத்தரவுயிருந்தும்..... நடைமுறை படுத்துவதற்கு தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுத்தான் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால்.... தேர்தல் முடிவுகள் வந்த பின்னால் புதிய ஆட்சி அமைந்த பின்னால் அதற்குரிய அனுமதிபெற்று காலஅவகாசம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
எனவே கட்டிட அனுமதிக்காக சலுகை கட்டணத்தில் கட்டணம் கட்ட முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் முழுமூச்சோடு அதற்காக பணியாற்றி புதிய ஆட்சி பொறுப்பேற்ற உடன் இன்னும்
ஓரிரு மாதங்கள் காலஅவகாசம் பெற்றுத் தருவோம் என்ற உறுதிமொழியை உங்களுக்கு தருவதில் பெருமை கொள்கிறோம்.
அன்புடன் உங்கள்
கே.ஆர். நந்தகுமார்.