அரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு.
தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வே.சம்பத்குமார் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மருதிபட்டி ஊராட்சி மருதிபட்டி மோட்டூர் மூங்கில்பட்டி ம.புதூர், கூச்சனுர்,கல்லடிப்பட்டி, எம்.வெளாம் பட்டி ஊராட்சி மற்றும் செட்ரப்பட்டி ஊராட்சி சந்தப்பட்டி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 40க்கு மேற்பட்ட கிராமங்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
.அப்பொழுது வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசியதாவது அதிமுக அரசு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது குறிப்பாக விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி மகளிர் சுய உதவிகுழு கடன் தள்ளுபடி மற்றும் நீர் மேலாண்மை நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் விவசாயிகள் வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள் எனவே விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட அருர் சட்டமன்ற தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார் .நிகழ்ச்சியின்போது அதிமுகஒன்றிய கழக ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் பசுபதி செல்வம் எம்.கே. மகாலிங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.சி.அன்பழகன் மற்றும் பாமக பாஜக தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்