காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கத்திற்கு காரிகூட்டம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு


காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கத்திற்கு காரிகூட்டம் கிராம மக்கள் உற்சாக  வரவேற்பு



ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை  ஊராட்சி காரிகூட்டம் கிராம பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கத்திற்கு  கிராம மக்கள் சார்பில் உற்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம்  ஊராட்சி ஒன்றியம் காரிகூட்டம் கிராம பகுதியில் 

காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் இன்று தீவிர வாக்குகள் சேகரித்தார். 

அவருக்கு காரிகூட்டம் ஜமாத் சார்பில் 

உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் அவர் காரிகூட்டம் கிராம முக்கிய வீதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் கேட்டார். அதைதொடர்ந்து அவர் வாணி, முடுக்கு தரவை, தெற்குதரவை உள்ளிட்ட கிராமங்களில் வாக்குகள் சேகரிக்க சென்றார். 

ராமநாதபுரம் திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை அப்துல்லா உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு