ஸ்டாலினை மிஞ்சும் எடப்பாடியார்.....?!

ஸ்டாலினை மிஞ்சும் எடப்பாடியார்...?!

விடிந்தால் வாக்குப்பதிவு என்ற நிலையில், ஒரு விஷயம் தமிழக அரசியல் களத்தை ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.. அது தலைவர்களின் பிரச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்

அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தங்கள் பிரச்சாரத்தை ஜரூராக ஆரம்பித்தன.. இதில் எடப்பாடி பழனிசாமி சற்று முந்திக் கொண்டார்..

ஓபிஎஸ்ஸுடன்கூட சொல்லாமல், சேலத்தில் அவராகவே பிரச்சாரத்தை தனியாக துவங்கிவிட்டார்... இது அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸுக்கு சற்று அதிர்ச்சியை தந்தது.. தன்னுடைய பண்ணை வீட்டில் கோபித்து கொண்டு உட்கார்ந்துவிட்டார் என்றுகூட செய்திகள் வந்தன. அப்போது தன் தொகுதியில் ஆரம்பித்த பிரச்சாரத்தை, எடப்பாடி பழனிசாமி பல கட்டங்களாக செய்து முடித்தார்..

ஸ்டாலின்

அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலினும், உங்கள் ஊரில் ஸ்டாலின், கிராம சபை கூட்டம் என பல்வேறு பெயர்களில் தமிழகம் முழுக்க வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு, இறுதியாக தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்.. ஆனால், இந்த இரு தலைவர்களின் பிரச்சாரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.. இருவருமே இருவருமே புகார்களை அள்ளி வீசிக் கொண்டனர்.. இருவருமே ஊழல் புகார்களை லிஸ்ட் போட்டார்கள்.. இருவருமே "சேலஞ்ச்" செய்து கொண்டனர்..கோபம், நெகிழ்ச்சி, உறுதிப்பிடிப்பு என இரு தலைவர்களின் பிரச்சாரமும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



இப்போது இது சம்பந்தமாகத்தான் ஒரு தகவல் வந்துள்ளது.. இந்த 2 பேரில் யார் அதிகம் பிரச்சாரம் செய்தது, யார் அதிக அளவு பிரச்சார தூரம் பயணம் செய்தது என்பது குறித்த தகவல்தான் அது.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுக்க 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சுமார் 250 இடங்களில் மக்களிடம் பேசியுள்ளார்.

அதேபோல, கடந்த மார்ச் 15-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்த ஸ்டாலின், நேற்று அவர் போட்டியிடும் கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.. 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், இந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் ஸ்டாலின் பேசி உள்ளார்.. 12 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார்.. ஒவ்வொரு ஊரிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்துள்ளதாக தெரிகிறது.

அதாவது ஸ்டாலினை எடப்பாடியார் ஓவர்டேக் செய்து அதிக இடங்களில் பேசியுள்ளதாக தெரிகிறது.. இந்த கணக்கு இப்படி இருந்தாலும், இவர்களின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு இருந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்பதுதான் இப்போ விஷயமே.. 

அதில் கூட எடப்பாடி யாருக்கு தான் முதலிடம் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்