தேர்தல் குறித்து: இபிஎஸ்- ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியது என்ன?

தேர்தல் குறித்து: இபிஎஸ்- ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியது என்ன?

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கி வரும் நிலையில், இபிஎஸ் ஒபிஎஸ் தேர்தல் முடிவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.



தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் நாங்கள் தான் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவோம் என்று அதிமுகவும், கடந்த 2 தேர்தல்களில் தவறவிட்ட ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்று திமுகவும் சூலுறைத்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெளியான கருத்துக்கணிப்புகள் இரு கட்சிகளுக்கும் சாதகமாவே அமைந்துள்ளது.

ஆனால் ஆட்சியை பிடிப்போம் என்ற அதீத நம்பிக்கையில் திமுகவினர் அடுத்தக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அதிமுக தரப்பில் முக்கிய தலைவர்களுகடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனால் இந்த தேர்தல் முடிவுகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் சமூகவலைதளங்களில் இரு கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும், தேர்தல் முடிவுக்கு பிறகு இரு கட்சிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.  

 கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிச்சாமி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.,

வீட்டில் ஓய்வில் இருந்தபடியே தனக்கு நெருக்கமானவரகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் முதல்வரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதற்கான தனது சொந்த ஊரான தேனியில் இருந்து சென்னை வந்த அவர், தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி குறித்து ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றை கையில் எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சில மணி நேரங்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனையில், முதல்வரிடம் இருந்த, தேர்தல் தினத்தன்று எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, மிக முக்கிய தொகுதிகளில் வாக்குகள் யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்த 2 இரண்டு அறிக்கைகள் என மொத்தம் 3 விதமான அறிக்கைகளை வைத்து இந்த ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தேர்தல் முடிவுகள் குறித்து இருவரும் அலசி ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து முதல்வர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், மற்ற அமைச்சர்களே மூத்த தலைவர்களோ யாரும் இது குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை. ஆனால் முதல்வரின் முன்னிலையில், அவரது நம்பிக்கைக்கு எதிராக பேச கூடாது என்ற அடிப்படையில் முதல்வருக்கு சாதகமாக பேசி வருகின்றனர். 

தேர்தலுக்கு முன்பு வரை வாய்மூடி மௌனமாக இருந்த பல ஊடகங்கள் கூட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. 184 தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதால் பெண்கள் ஒட்டுமொத்தமாகஅதிமுகவை ஆதரித்து உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர் இதனால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக பலமான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவை கட்சியில் சேர்க்காதது தேமுதிக தினகரன் கட்சியை கூட்டணியில் இனைக்காதது  அதிமுகவுக்கு பலவீனம் இது தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு குறைத்துள்ளது போன்ற தோற்றம் மற்றும் இபிஎஸ் ஓபிஎஸ் க்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் ஓபிஎஸ் சரியாக தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை இருவருக்கும் இணக்கமான சூழ்நிலை சரியில்லை போன்ற எல்லா வகையான சர்ச்சை பேச்சு களுக்கும் இருவரின் சந்திப்பும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வட மாவட்டங்களை போன்று தென் மாவட்டங்களிலும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிமுகவுக்கு அமோக ஆதரவு பெருகி உள்ளதை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் இது அவர் அதிமுகவுக்கு கிடைக்கும் Hotric வெற்றி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்