கொளத்தூரில் குறைவான வாக்குப்பதிவு அச்சத்தில் மு க ஸ்டாலின்...?
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், அதன் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார்.. இதில் ஸ்டாலின் தொகுதியைவிட எடப்பாடியார் தொகுதியில் அதிக வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் முக ஸ்டாலின், அமமுக சார்பில் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளராக களம் கண்டனர்.
ஐந்து முனை போட்டி ஏற்பட்டாலும், வழக்கம்போல திமுக - அதிமுக இரண்டு கட்சிகளுக்குதான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது..
அந்த வகையில் நேற்றைய தினம் தேர்தல் நடந்து முடிந்தது.. முக்கிய தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு வந்து வாக்களித்தனர். டைம் ஆக ஆக, வெயில் அதிகமாகும் என்பதால், நிறைய பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்துவிட்டு சென்றனர்..
மற்றொருபுறம், விஜய், அஜித், விஜய்சேதுபதி போன்றோரின் வாக்குப்பதிவு நேற்றைய தினம் டிரெண்டானது.. கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது மிக முக்கியமான விஷயம்... நேற்றைய தினம், ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கினாலும், அவை போலீஸாரின் உதவியுடன் தடுக்கப்பட்டன. மொத்தத்தில், எந்த வித பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது..!
இந்நிலையில், நடந்து முடிந்த வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்... அதன்படி, தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. இதில் ஸ்டார்களின் தொகுதிகளில் பதிவான வாக்குகள் குறித்தும் சத்யபிரதா தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன... அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
துணை முதல்வர் ஓபிஎஸ் போடி தொகுதியில் -73.65 சதவீதமும், மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீதமும், டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீதமும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீமும் பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் மிகக்குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில், கடைசி 5 இடங்களும் வெளியாகி உள்ளன. அதில், அண்ணாநகர் 57.02 சதவீதம், மயிலாப்பூர் 56.59 சதவீதம், வேளச்சேரி 55.95 சதவீதம், தி.நகர் 55.92 சதவீதம். வில்லிவாக்கம் 55.52 சதவீதம் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில், குறிப்பிட்டு நாம் பார்க்க வேண்டியது எடப்பாடியார் மற்றும் கொளத்தூர் தொகுதிகள்தான்.. இதில் ஸ்டாலின் தொகுதியைவிட முதல்வர் தொகுதியில் அதிக அளவு வாக்கு பதிவாகி உள்ளது.. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.. பொதுவாக, கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு முறையாக நடக்கும்.. முழுமையாகவும் நடந்த வரலாறும் உள்ளது.. அந்த வகையில் எடப்பாடியார் தொகுதியில் வாக்குகள் கூடியிருக்கலாம்.
அதேபோல, சென்னையை எடுத்து கொண்டால் எப்போதுமே வாக்குபதிவு சற்று குறைவுதான்.. மக்கள் சில சமயங்களில் ஓட்டுப்போட ஆர்வம் காட்டாமல் போய்விடுவதும் உண்டு.. இந்த முறையும் அப்படித்தான் குறைவான வாக்கு பதிவு பதிவாகி உள்ளது.. அதனால்தான், தமிழகத்திலேயே மிக குறைவான வாக்குப்பதிவு நடந்ததாக சொல்லப்பட்ட கடைசி 5 தொகுதிகளும் சென்னையில்தான் அடங்கி உள்ளன.
திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மிக குறைவான விகிதத்தில் வாக்குப்பதிவு நடந்துள்ளது பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி உள்ளதும் ஸ்டாலின் தொகுதியில் மிகக் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகி உள்ளதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மக்கள் மு க ஸ்டாலின் ஐ காட்டிலும் எடப்பாடி பழனிசாமி சிறந்த முதல்வராக தொடர வேண்டும் என்று விரும்புவதைத் தான் இது எடுத்துக்காட்டுகிறது எனவே தான் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலினுக்காக அதிக அளவில் வாக்குகள் செலுத்தப்படவில்லை தற்போது பதிவாகியிருக்கும் வாக்குகள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது கூட அந்த வாக்குகள் அனைத்தும் ஒரு உதயசூரியனுக்கு போடப்பட்டு இருக்கும் என்று நம்ப முடியாது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் ஸ்டாலினுக்கு கடுமையான போட்டியை கொடுத்துள்ளார் எனவே இருவருக்கும் வாக்கு வித்தியாசம் என்பது மிக அதிகப்படியாக இருக்காது இதில் ஸ்டாலின் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.