வேப்பனப்பள்ளியில் கே.பி. முனுசாமி க்கு வெற்றி முகம்

 வேப்பனப்பள்ளியில் கே.பி. முனுசாமி க்கு வெற்றி முகம்



வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011 இல் உருவாக்கப்பட்டது அப்போது நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பாக தேமுதிக வேட்பாளர் எஸ். எம். முருகேசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் டி செங்குட்டுவன் போட்டியிட்டார் அப்போது முரசு சின்னத்துக்கு விடவேண்டிய வாக்குகள் அருகில் இருந்த முரசு போன்ற தோற்றமுடைய கூடை சின்னத்திற்கு விழுந்ததால் உதயசூரியன் வெற்றி பெற்றது செங்குட்டுவன் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக இங்கு போட்டியிட்ட போது அதன் வேட்பாளராக கே.பி. முனுசாமி முதலில் அறிவிக்கப்பட்டார். அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்த வேளையில் கட்சித் தலைமை திடீரென்று அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்தது. இதனால் கட்சித் தொண்டர்கள் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் திறமையாக தனது பணிகளை செய்யாததால் இந்த தொகுதியில் அதிமுக தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால்தான் திமுக வேட்பாளர் பி முருகன் எம்எல்ஏ ஆனார்.

இப்படி வெற்றி பெற்ற இருவரும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கான வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யவில்லை. இன்னும் கூட பல தொகுதிகளில் எங்கள் ஊர் எம்எல்ஏ எப்படி இருக்கிறார் என்று கூட பலருக்கு தெரியாது. இருந்தாலும் இது திமுகவின் கோட்டை மீண்டும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறையும் இவர்கள் வெற்றி பெற்றது என்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக தான் உள்ளது.

இப்போது தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி. முனுசாமிதொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் ஏற்கனவே இந்த தொகுதியின் பல பகுதிகள் காவேரிப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருந்ததால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் இந்தப் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 2011ல் அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தான் வேப்பனப்பள்ளி மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளார். சூளகிரி பேருந்து நிலையம் இவரது முயற்சியால் கட்டப்பட்டதுதான். இவர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இல்லாமல் பல்வேறு பணிகளை செய்துள்ளார் கடந்த பத்து வருடங்களாக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த திமுக எம்எல்ஏக்கள் இந்த தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.

எனவே 2021 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் அதிமுகவின் வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றது. அதற்கு காரணம் அதிமுக வேட்பாளரின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள். நாங்கள் தொகுதி முழுக்க சுற்றிப் பார்த்தபோது இவருக்கான ஆதரவு அமோகமாக தெரிந்தது.

இந்த தொகுதியில் அதிமுக பாமக பாஜக வின் வாக்குகள் கணிசமாக உள்ளது. இது நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி என்பதால் கே.பி. முனுசாமி வெற்றி பெற்று வந்தால் தமிழகத்தின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகிப்பார் அதனால் இந்த தொகுதி மென்மேலும் பல வளர்ச்சியினை பெரும் என்பதால் அவருக்கான வாக்குகளை நிறையவே அளித்துள்ளார்கள். எனவே இந்தத் தொகுதியில் கே.பி. முனுசாமி வெற்றி மகுடம் சூட்டுவது நிச்சயம்.