எம்ஜிஆரின் வெற்றி ஃபார்முலா
புரட்சித்தலைவர் 1972 ல் திமுக வை விட்டு வெளியேற்றிய சமயத்தில் ஒரு மேடையில்
SSR மட்டுமல்ல அந்த மேடையில் பேசிய மூவருமே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தவர்களே!!
இந்த கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் ஒரே கேள்வியை மூவரிடமும் கேட்டதற்கு மூவரின் பதில்.
SSR: "ஆம் எம்ஜிஆர் எனக்கு அண்ணன் மாதிரி. நான் எம்ஜிஆரை நேசிக்கிறேன் அதைவிட அதிகமாக கழகத்தை நேசிக்கிறேன் "
மதுரை முத்து: "நீங்க சொல்றது உண்மைதான். பல்பு நல்லாத்தான் எரிஞ்சது. இப்போ பியூஸ் போயிருச்சு. தூக்கி போட்டுட்டோம்."
ராஜாங்கம் எம்பி: நான் எம்ஜிஆரை மதிக்கிறேன். அவர் திமுகவை மதிக்கும் வரை... அண்ணாவுக்கு இருந்த பெருந்தன்மை எங்களுக்கு இல்லை...
இந்த இடத்தில் அண்ணா பற்றி கூற வேண்டும். ஒருமுறை எம்ஜிஆர் "காமராசர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி " என்றார். திமுகவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. "எம்ஜிஆர் எப்படி இதை சொல்லலாம்? அண்ணா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்? "
பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்ணாவுடன்.
பத்திரிகை :எம்ஜிஆர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா:(நகைச்சுவையாக) எதிர்க்கட்சிகளை கூட மதிப்பது எப்படி என எம்ஜிஆர் இடம் பாடம் படி என தம்பிகளிடம் சொல்லப் போகிறேன்.
பத்திரிகை: சம்பத், கண்ணதாசன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கியிருந்தீர்களே!! எம்ஜிஆர் இடம் மட்டும் ஏன் கரிசனம்?
அண்ணா :அவர்கள் வைர கடுக்கன் போன்றவர்கள். காது புண்ணானதால் கழற்றி வைத்திருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர் என் இதயக்கனி. இதயத்தை எப்படி கழற்ற முடியும்?
இதுதான் அண்ணாவுக்கும் தலைவருக்கும் உள்ள புரிதல். அண்ணாவுக்கு ஈகோ என்பதே கிடையாது. கருணாநிதிக்கு அவருடைய ஈகோவே வினையானது.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு சத்தியவாணி முத்து அம்மா சமாதானம் பேச போகிறார். தலைவர் கோபமாக" சமாதானம் என்பது நடுநிலைமையாளர் பேச வேண்டும். என்னை நீக்கும் பாரத்தில் கையெழுத்து போட்ட உங்களுக்கு அந்த தகுதியில்லை"என்றார்.பிறகு அதே சத்தியவாணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க தன் முதல் அமைச்சரவையில் 1977ல் சேர்த்துக்கொண்டார்.
1972-1974 தலைவருக்கு மிகச் சோதனையான காலகட்டம். அவருடன் இருந்த, அவரால் பிழைத்த பலரும் பதவிக்காக அவரை விட்டு பிரிந்தனர்.
நினைத்ததை முடிப்பவன் படத்தில்"பொன் பொருளை கண்டவுடன் வந்தவழி மறந்துவிட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே!! என் மனதை நானறிவேன் என் உறவை நான் மறவேன். எதுவான போதிலும் ஆகட்டுமே.நன்றி மறவாத நல்ல மனம் போதும். என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் "என அவர்களை மனதில் வைத்தே பாடினார். அப்போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தது ரசிகர்கள் மட்டுமே!!
1974ல் திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அவருடைய "மாஸ்"புரிந்து பல தலைவர்கள் எம்ஜிஆர் இடம் வந்து சேர்ந்தனர். தலைவர் பாடல் வரியும் பலித்தது.
கண்ணதாசன் சொன்னது: "சம்பத்தும் நானும் திமுக வை விட்டு விலகி சென்ற போது எங்களுடன் பல தலைவர்கள் வந்தார்கள். ஆனால் தொண்டர்கள் வரவில்லை. எம் ஜி ஆர் பிரிந்த போது தலைவர்கள் செல்லவில்லை. ஆனால் தொண்டர்கள் அவருடன் சென்றுவிட்டனர். அதனால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது."